Saturday, January 28, 2012
இலங்கை:: மன்னார் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வீடத்தல் தீவு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் மன்னாரில் இருந்து விடத்தல் தீவு பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்துமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்ள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்தவர்கள் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜேசப் அகஸ்ரின் றீகன் (வயது-30)இஅந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி(வயது-30)என தெரியவந்துள்ளது.
அந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி என்பவருக்கு எதிர்வரும் வாரம் திருமணம் நடைபெறவிருப்பதனால் குறித்த இரண்டு போரும் யாழ்ப்பாணத்திற்கு சென்று உறவினர்களுக்கு அழைப்பிதல்களை கொடுத்து விட்டு மீண்டும் மன்னார் திரும்பும் போதே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment