Sunday, January 1, 2012

இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் சில மணி நேரங்களில் படுகொலை!

Sunday, January, 01,2012
இலங்கை::இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நபர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள கோரச் சம்பவமொன்று தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை வேளையிலேயே குறித்த நபர் தலவத்து கொட சந்தியில் வைத்து கடத்தப்பட்டுள்ளதுடன் காலை 7 மணியளவில் தலவத்துகொட எகமுது மாவத்தை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையிலேயே குறித்த நபர் பலியாகியுள்ளதாகவும் பலியானவர் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய எச்.ஜீ.ஆர்.லிலன்த தாபரே என்பவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் தொடர்பில் இதுவரையிலும் எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லையெனவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment