Sunday, January, 01,2012
இலங்கை::வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முற்பட்ட இரு இந்தியர்களை கொழும்பு புறக்கோட்டை பொலிஸார் கைது செய்து சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் கொண்டுச் செல்ல முற்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெசஞ்சர் வீதியில் வைத்தே குறித்த இரு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு கோடியே 17 இலட்சத்து 49 ஆயிரத்து 28 ரூபா பெறுமதியான டொலர்கள் மற்றும் யூரோக்களையுமே மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்ட நாணயத்தாள்களை பறிமுதல் செய்துள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

No comments:
Post a Comment