Saturday, January 28, 2012

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்: ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

Saturday, January 28, 2012
இலங்கை::இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடுமென அரசாங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தாருஸ்மன் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீவன் ராட்னர் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வறாhன அழுத்தங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரகடனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்டீவன் ரட்னரின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து, ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவர், உறுப்பு நாடு ஒன்றுக்கு எதிராக செயற்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment