Saturday, January 28, 2012
இலங்கை::இலங்கையில் நல்லிணக்கத்தையும் புனரமைப்பையும் முன்னெடுத்துச்செல்ல ஐரோப்பிய நாடுகள் ஆதரவை வழங்கவேண்டும் என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் போன்றோர் கடந்த 5 ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளனது.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Van Orden அங்கு கருத்துரைக்கையில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவில் உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு சென்று திரும்பிய நாடர்ளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள போதும் அதனை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண நல்லிணக்க ஏற்படுத்தப்படுவது அவசியமானதாகும். இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதிப்போரில் இடம்பெற்ற
குற்றச்செயல்கள் குறித்த தகவல் எதனையும் வெளியிடாமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் குறித்த விடயங்கள் தொடர்பிலும் தமது கவனத்தை திருப்பவேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.
இதன்போது கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் ரவீந்திரநாத் ஆரியசிங்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment