Sunday, January, 01,2012
இலங்கை::இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், 7 நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள புலிகளின் போர் குற்றவாளிகளின் விபரங்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்த இரண்டு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில், 7 நாடுகளில் உள்ள 40 போர் குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
புலிகளின் சில போர் குற்றவாளிகளை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்களின் அதிகாரிகள் தமது வாகனங்களில் அழைத்துச் சென்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கி விட்டு, அவர்கள் வெளிநாடு செல்ல உதவியிருப்பதாக தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. சர்வதேச காவற்துறையினர், இந்த போர் குற்றவாளிகளை கைதுசெய்ய பிடிவிராந்து பிறப்பித்துள்ள போதிலும், அந்த நாடுகள், அவர்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sunday, January 1, 2012
அரசியல் தஞ்சம் பெற்றுள்ள புலிகளின் போர்க் குற்றவாளிகளின் விபரங்களை வெளியிட இலங்கை அரசாங்கம்! தீர்மானம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment