Sunday, January, 01,2012
இலங்கை::புலிகள் மற்றுமொரு ஆயுத போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
வன்னியில் இடம்பெயர் மக்களை மையப்படுத்தி ஓர் நிறுவனத்தை அமைத்து அதன் மூலம், ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க முயற்சி எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளை மீளவும் இணைத்துக் கொள்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
நெடியவன், ருத்ரகுமாரன் மற்றும் வணக்கத்திற்குரிய இமெனுவல் பிதா ஆகியோரின் தலைமையில் இந்த அமைப்பு இயங்க உள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களின் இந்த நோக்கம் பற்றி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இடம்பெயர் மக்களுக்கு நலன் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சில அமைப்புக்களுடன் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்புக்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment