Sunday, January, 01,2012
லண்டன்: உலகம் முழுவதும் நடக்கும் 3ல் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார். இது பற்றி, டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது. எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அவற்றில் தங்கள் முன்னாள் காதல், கள்ளக் காதல், அலுவலக நட்பு ஆகியவை பற்றி தெரிவிக்கின்றனர். இவை வாழ்க்கை துணைக்கு தெரிய வரும்போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. விவாகரத்தில் முடிகிறது. மேலும், பேஸ்புக் தொடர்பு மூலம் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது. அதை வாழ்க்கை துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தேடுவதன் மூலம் கணவர் அல்லது மனைவியால் கண்டுபிடித்து விட முடிகிறது. விவாகரத்து வழக்கில் பேஸ்புக் பதிவுகளை சாட்சியாக காட்டுவோர் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி. இவ்வாறு டெய்லி மெயில் செய்தி தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment