Sunday, January, 01,2012
நியூயார்க்::அமெரிக்காவை சேர்ந்த 51 வயது ஆசாமி, ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பரபரப்பியது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் டீன்ஸ்மித். வயது 51. சந்தேகப்படும்படி இவருடைய நடவடிக்கைகள் இருந்ததால், மிச்சிகன் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, Ôஇதுவரை ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரப்பி இருக்கிறேன்Õ என்று டேவிட் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மிச்சிகன் போலீசார் கூறியதாவது: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட டேவிட், பல ஆண்டுகளாக ஆண்கள், பெண்கள் என 3,000க்கும் அதிகமானவர்களுடன் பாதுகாப்பற்ற உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், எப்போது எச்ஐவி பரிசோதனை செய்தார். எப்போது நோயை உறுதி செய்தார் என்ற விவரங்கள் இல்லை. எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்து, அதை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனே மற்றவர்களுடன் பாதுகாப்பற்ற உறவு வைத்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. எனினும், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மிச்சிகன் போலீசார் தெரிவித்ததாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment