Thursday, December 1, 2011

புலிகளின் தொடர்பாடலை UNP அரசாங்கம் ஒட்டுக் கேட்டது – விக்கிலீக்ஸ்!

Thursday, December 01, 2011
புலிகளின் தொடர்பாடலை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒட்டுக் கேட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய குறிப்பினை ஆதாரமாகக் கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சமாதான முனைப்புக்கள் தொடர்பில் புலிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உணர்ந்து கொண்டதாக அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் மிலிந்த மொரகொட, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் குறித்து அமைப்பின் சில தரப்பினர் அதிருப்தி கொண்டிருந்தனர்.

அன்ரன் பாலசிங்கம் மிகவும் மென்மையான அணுகுமுறைகளை கடைபிடிப்பதாக சில புலி உறுப்பினர்கள் கருதியதாக அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ல்ஸ் மற்றும் பிரதித் தூதுவர் லுயிஸ் அம்லிமஸ் ஆகியோரினால் 2002ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வடக்கு புலித் தலைவர்களை விடவும் கிழக்கு புலித் தலைவர்கள் கடுயைமான நிலைப்பாட்டிக் கொண்டிருந்ததாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டு;ள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் சமாதான முனைப்புக்களை புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment