Thursday, December 01, 2011
British embassy in Iran attacked News And Photo:
www.dailymail.co.uk/news/article-2067613/Iranian-students-storm-British-Embassy-Tehran-staff-taken-hostage.html
லண்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரகங்கள், அந்நாட்டு மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஈரானுக்கான தனது தூதரக அதிகாரிகளை, பிரிட்டன் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.
என்ன காரணம்? : கடந்த வாரம், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்துவதற்காக, அந்நாட்டின் மத்திய வங்கி மீது, பல பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ஈரான் முடிவு : ஈரான் வங்கிகளுடனான தனது வங்கித் தொடர்புகளை, பிரிட்டன் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது. இதையடுத்து, கடந்த 27ம் தேதி, ஈரான் பார்லிமென்டில், பிரிட்டன் உடனான அரசியல் ரீதியிலான உறவுகளை குறைத்துக் கொள்வதாக, ஓட்டெடுப்பு மூலம் முடிவெடுக்கப்பட்டது.
தூதரகங்கள் தாக்குதல் : இந்நிலையில், நேற்று முன்தினம், டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் வாசலில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டன் கொடியை எரித்தனர். ஒரு கட்டத்தில், மாணவர்கள் வாசல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, தூதரகத்தின் ஆறு ஊழியர்களை சிறை பிடித்தனர். தூதரகத்தை தாக்கினர். சம்பவம் நடந்து சிறிது நேரத்திற்குப் பின் அங்கு வந்த ஈரான் போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெஹ்ரானின் வடபகுதியில் இருந்த பிரிட்டனின் மற்றொரு தூதரகமும் தாக்கப்பட்டது. 1979ல், ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்கு அடுத்து, தற்போது தான் பிரிட்டன் தூதரகம் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் எச்சரிக்கை : இச்சம்பவத்திற்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்கா, பிரிட்டனும் கண்டனம் தெரிவித்தன. ஈரானும் வருத்தம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும் கூறியது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கை விடுத்தார்.
பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் பார்லி., சபாநாயகர் அலி லரிஜானி,"கவுன்சில் அவசர கதியில் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது ஈரான் போலீசார் அமைதியை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் இக்கண்டனம் மூலம், அமெரிக்காவும், பிரிட்டனும், முன்பு செய்த குற்றங்களை மூடி மறைக்க கவுன்சில் முயல்கிறது' என்றார்.
திரும்ப அழைப்பு : இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள தனது தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினரை, பிரிட்டன் அரசு, துபாய்க்கு அழைத்துச் சென்று விட்டது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் வெளியிட்ட அறிக்கையில்,"தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முன்னுரிமையான விஷயம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணம் கருதி, ஈரானில் உள்ள தனது தூதகரத்தை மூடப் போவதாக, நார்வே அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment