Thursday, December 1, 2011

பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை!

Thursday, December 01, 2011
பிரித்தானியாவின் ஹியூடன் பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடும் வெட்டுக் காயங்களுடன், இந்த இளைஞர் பணியாற்றிய வர்த்தக நிலையத்தினுள் வீழ்ந்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பீ.பீ.சீ. உலக செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா நேரத்தின்படி நேற்றிரவு 9 மணியளவில் கடும் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை அடையாளம் காண்பதற்கு அந்த நாட்டு பொலிஸார் முயற்சித்து வருவதுடன், பிரேத பரிசோதனையை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பீ.பீ்.சீ.செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞரின் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment