Friday, December 2, 2011

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணையுமா-தமிழ் தேசிய கூட்டமைப்பு?

Friday, December 02, 2011
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணையுமாறு அரசாங்கம் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேற்று கோரியுள்ளது.

எனினும் கூட்டமைப்பு இதனை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இடம்பெற்று வருகின்ற பேச்சுவார்த்தையின் முடிவுகள், குறித்த நாடாளுமன்றக் குழுவில் முன்வைக்கப்பட்டு, பரிசீலிக்கப்படுமாக இருந்தால், அதில் இணைந்துக் கொள்வது குறித்து சிந்திக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன், வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போதைக்கு இது குறித்து பதில் கூற முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரனை நாம் தொடர்பு கொண்டு வினவினோம்.

அரசாங்கத்துடன் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவிருப்பதாகவும், அதன் பின்னர் இது குறித்த தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இதுவரையில் முன்னேற்றங்கள் காணப்படவில்லை.

எனினும், எந்தெந்த விடயங்கள் குறித்து பேசப்பட வேண்டும் என்பதை அடையாளம் கண்டுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment