Friday, December 2, 2011

இலங்கைப் பணிப்பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபருக்கு சிறைத்தண்டனை!

Friday, December 02, 2011
இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவரை பஹ்ரேய்னில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த பங்களாதேஷ் பிரஜைக்கு பஹ்ரேய்ன் நீதிமன்றம் ஒருவருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறியிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற பங்களாதேஷ் பிரஜை அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது வீட்டின் உரிமையாளர்களால் பணிப் பெண் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பங்களாதேஷைச் சேர்ந்த துப்பரவுத் தொழிலாளர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவர் பங்களாதேஷூக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment