Friday, December 2, 2011

மகாராஷ்டிராவில் பதற்றம் நக்சல் தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் பலி!

Friday, December 02, 2011
கோண்டியா : மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் போலீசார் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானார். மகாராஷ்டிராவில் கோண்டியா மற்றும் கட்சிரோலி ஆகிய எல்லை மாவட்டங்களில் நக்சல் பிரச்னை இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள தம்டிதோலா கிராமத்தில் நேற்றுமுன்தினம் அரசுக்கு எதிராக நக்சல்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தகவல் அறிந்து 5 போலீசார் நேற்று அங்கு சென்றனர். தம்டிதோலா கிராமத்தை போலீஸ் படை நெருங்கிய போது திடீரென மறைவிடத்தில் இருந்த நக்சல்கள் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் மனோஜ் அட்மரம் பின்சாட் என்ற கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது. சிறிது நேர துப்பாக்கி சண்டைக்கு பின் நக்சல்கள் அங்கிருந்து தப்பினர். சுமார் 15 நக்சல்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக உயிர் தப்பிய போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நக்சல் எதிர்ப்பு படையை சேர்ந்த 60 வீரர்கள் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment