Friday, December 2, 2011

வெளிநாட்டு உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Friday, December 02, 2011
ஒரே தேசமாக எழுச்சிபெற வேண்டுமாயின் வெளிநாட்டு உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எமது கலாசாரத்திற்கு வெளிநாடுகளின் சில நடவடிக்கைகள் ஏற்புடையதாக அமையாது எனவும் அத்தகைய நடவடிக்கைகளையே நிராகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு மியுஸியஸ் கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையை நேசிக்கும் நாட்டுக்கு சேவையாற்றும் பல வெளிநாட்டவர்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருட பயங்கரவாதம் காரணமாக இலங்கையின் சிறுவர் மற்றும் இளையோர் சமுதாயத்திலிருந்து நாடகக் கலை விடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாணவர்களை கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுத்தி, அவர்களை உளநலம் கொண்ட மகிழ்ச்சியுடன் வாழும் சந்ததியினராக மாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 30 வருடங்களாக புலிகளுடனான யுத்தம் இடம்பெற்றது.

இதனால் புலிகளுடன் இருந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், திரையரங்களில் இருந்து ஒதுக்கப்பட்டே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment