Friday, December 02, 2011
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் வரும் 7ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால் மக்கள் பணத்தில் இதுவரை ரூ. 30 கோடி வரை வீணாகியுள்ளதாம்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து நாடாளுமன்றம் முடங்கிப்போயுள்ளது. 2ஜி ஊழல், கருப்புப் பண விவகாரம், தெலுங்கானா விவகாரம், தற்போது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் ஆகியவற்றால் நாடாளுமன்றம் இன்றுடன் சேர்த்து 9 நாட்களாக முடங்கியுள்ளது.
இன்று நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. லோக் சபா கூடியவுடன் சபாநாயகர் மீரா குமார் கேள்வி நேரத்தை துவங்கினார். உடனே மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாசுதேப் ஆச்சாரியா எழுந்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அவருடன் பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியும் சேர்ந்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷி நோட்டீஸ் கொடுத்தார். இதையடுத்து பாஜக மற்றும் இடதுசாரிகள் அமளியில் ஈடுபட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் கூச்சலிட்டனர்.
இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உரிய தீர்வு காணக் கோரி வாசகங்கள் அடங்கிய அட்டைகளை உயர்த்திக் காட்டினர். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் லோக் சபா வரும் 7ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல அதிமுக எம்.பிக்களும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர்.
இதே போன்று ராஜ்யசபாவிலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்று வலியுறுத்தி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அந்த அவையும் வரும் 7ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment