Friday, December 2, 2011

21 வருடங்களின் பின்னர் பலாளி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த மேலும் பல நிலப்பரப்புக்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பு!

Friday, December 02, 2011
21 வருடங்களின் பின்னர், பலாளி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மீதமாக இருந்த 2 சதுர ஏக்கர் நிலப்பரப்பையும் இராணுவத்தினரால், வாழ்வதற்குப் பொருத்தமானதாக மாற்றப்பட்ட நிளையில்,அந்நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் குடியேற்றப்பட்டனர். இதன் பொருட்டு இதயக்காடு பிள்ளையார் கோவிலில் பூஜைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் வழிகாட்டளுக்கு அமைய இக்காணிகள் அதன் உண்மையான உரிமையாளர்களிடம் கையளிக்கமுன்னர் J/283 இதயக்காடு கிராம சேவகர் பிரிவு மற்றும் J/284 வள்ளாலை கிராம சேவகர் பிரிவுகளில் மிதி வெடி அகற்றும் பணிகள், யாழ்.பாதுகாப்புப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவால் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டது.

நிலங்களை ஒப்படைக்கும் இந் நிகழ்வுக்காக இதயக்காடு பிள்ளையார் கோவிலில் ஓர் விசேட சமய வளிபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில்யாழ்.பாதுகாப்புப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, யாழ்.அரச அதிபர் இமள்டா சுகுமார், கோப்பாய் பிரதேச செயலாளர் திரு.பிரதீபன்,இராணுவ உயரதிகாரிகள் மற்றும் பெரும் திரளான கிராமவாசிகளும் கலந்து கொண்டனர்.

கோவில் வளாகம் மற்றும் சாலையில் இரண்டு பக்கங்களும், பொதுமக்கள் வசதிக்காகவும் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாகவும் சுத்தப்படுத்தப்பட்டது.இதற்கமைய சுமார் 326 குடும்பங்களைச் சேர்ந்த 1085 உறுப்பினர்கள் இதன் மூலம் பயனடையவுள்ளனர்.

No comments:

Post a Comment