Friday, December 2, 2011

புலி ஆதரவாளர்களுடன் அரசசார்பற்ற நிறுவன குழுவொன்று இணைந்து இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டது என நிரூபிக்க சூழ்ச்சி – திவயின!

Friday, December 02, 2011
வடக்கில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும், இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவன குழுவொன்றும் இணைந்து, இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை நிரூபிக்க பெரும் சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.

இதற்காக சுவிஸ் வங்கிகளில் உள்ள புலிகளின் பணத்தில் இருந்து நிதி பெறப்பட்டுள்ளது. இந்த சூழ்ச்சித் திட்டத்தின் புதிய நடவடிக்கை, நகுலன் என்ற புலிகளின் தளபதி, இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார் என பிரசாரம் செய்வதாகும்.

வடக்கில், இணையத்தள வசதிகளை கொண்டுள்ள இந்த நபர்கள் இப்படியான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், புலிகளுடன் செயற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவித்துள்ளதாக திவயின கூறியுள்ளது.

No comments:

Post a Comment