Friday, December 2, 2011

இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்று கனடா நாடாளுமன்றில் மனித உரிமை கண்காணிப்பகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது- திவயின!

Friday, December 02, 2011
இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்று கனடா நாடாளுமன்றில், மனித உரிமை கண்காணிப்பகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை இலங்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் மனித உரிமை கண்காணிப்பகம் கனடாவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் எலியன் பியர்சன் என்பவரே இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கைக்கு எதிராக பல போலிக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment