Friday, December 2, 2011

வடக்கில் காணி இல்லாதவர்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் நன்னோக்கிலேயே காணிகள் பதியப்படுகின்றன-பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Friday, December 02, 2011
வட பகுதியில் காணி இல்லாத மக்களுக்குக் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நன்னோக்கிலேயே அரசாங்கம் காணிப்பதிவை மேற்கொள்ளுவதாக மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியும், சில தமிழ் அரசியல் கட்சிகளும் கூறுவது போல் எதுவிதமான தவறான நோக்கத்தையும் கொண்டு காணிப்பதிவு மேற்கொள் ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

வட பகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு தொடர்பாக எதிர்க்கட்சியும், சில தமிழ் அரசியல் கட்சிகளும் பொய் பிரசாரங்களிலேயே ஈடுபட்டிருப்பதாகவும் அக்கட்சிகளின் கூற்றுகளில் எதுவிதமான உண்மையுமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரனபிம காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணி மறசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகக் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் 70 ஆயிரம் பேருக்கு ரன்பிம காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த சிந்தனையில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு அமைய காணியற்றோருக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இற்றைவரையும் எழுநூறு பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படடுள்ளன. என்றாலும் தொடர்ந்தும் காணியற்றோருக்குக் காணி உறுதிகள் வழங்கப்படும். இதே போல் வட பகுதியில் காணியற்றோருக்கும் காணிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு உட்பட முழுநாட்டிலும் தெரிவு செய்யப்பட்ட 5000 பேருக்கு நேற்று காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment