Friday, December 2, 2011

திருட்டு டி.வி.டி.களுக்கு கொடுக்கும் பணம் பாக். தீவிரவாதிகளுக்கு போகிறது : கமலஹாசன் பரபரப்பு பேச்சு!

Friday, December 02, 2011
சென்னை: தமிழ் திரையுலகை திருட்டு டி.வி.டி.க்கள் நசுக்கி வருகிறது. சமீபத்தில் ரிலீசான 7ஆம் அறிவு, வேலாயுதம், வித்தகன் படடி.வி.டி.க்களும் உடனடியாக கடைகளுக்கு வந்துவிட்டன.

தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் கிண்டி லீராயல் பெரிடியன் ஓட்டலில் நடக்கும் திரைப்பட டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாட்டில் திருட்டு டி.வி.டி.க்களை ஒழிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய கமலஹாசன், திருட்டு டி.வி.டி.க்கள் பணம் தீவிரவாதிகளுக்கு செல்கிறது என்று குற்றம் சாட்டினார்.

திருட்டு டி.வி.டி.க்கள் பாகிஸ்தானில் தயாராகிறது. அந்த டி.வி.டி.க்களை வாங்குவதற்கு மக்கள் கொடுக்கிற பணம் நமக்கு வருவது இல்லை. தீவிரவாதிகளுக்கு போகிறது என்று அவர் பேசினார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் பேசும்போது திருட்டு டி.வி.டி.க்கு எதிராக தமிழகத்தில் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை சரியாக அமல்படுத்தப்படுவது இல்லை. இப்பிரச்சினையில் தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மதுரையில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டு டி.வி.டி.க்கள் இல்லை. அங்குள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரின் தீவிர நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்றார்...

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், திரைப்பட டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகை த்ரிஷா குத்துவிளக்கேற்ற, கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘திருட்டு விசிடிகளுக்கு எதிராக நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்திய படங்கள் 40சதவிகிதம் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. சர்வதேச அளவில் அதிமான மக்கள் விரும்பி பார்க்கும் படங்களாக இந்திய சினிமா இருக்கிறது. இதனால், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து படங்களை தயாரிக்க, விநியோகிக்க முன்வரவேண்டும்’’ என்றார்.

கமல்ஹாசன், மாநாட்டு நோக்கத்தை விளக்கி பேசினார். அவர் கூறுகையில், ‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுத்தவன். டிஜிட்டல் சினிமா வளரும் போது எங்களுக்கு மட்டுமல்ல; அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும். எந்த துறையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. சினிமாவில் டிஜிட்டல் தவிர்க்க முடியாது. அதை நோக்கி திரைப்படத் துறையை அழைத்து செல்லும் முயற்சிதான் இந்த மாநாடு’ என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகரன், திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், யுடிவி சேர்மன் ரோனி ஸ்குரூவாலா ஆகியோர் பேசினர். கே.பாலசந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக, இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ் குமார் வரவேற்றார். மாநாடு இன்றும் தொடர்கிறது.

No comments:

Post a Comment