Friday, December 2, 2011

3 வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம்!

Friday, December 02, 2011
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் 3 வது நாளாக இன்றும் வலுக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளர்களும், மீன்பிடி சார்புத் தொழிலாளர்கள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிலுக்குச் செல்லவில்லை.

கடந்த மாதம் 28 ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி 7 நாட்கள் விசாரணைக்காக காங்கேயம் காவல் நிலையத்தில் தமிழக மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீன்பிடித்தொழில் முடங்கியுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு தரப்பில் மீனவர்களையும், படகுகளையும் வரும் 7 ஆம் தேதி மீட்டு தருவதாக உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment