Thursday, December 1, 2011

மொரட்டுவை ராதாவத்தை பகுதி சிறுவர் இல்லமொன்று சுற்றுவளைக்கப்பட்ட சம்பவம் குறித்து முறைப்பாட்டினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மீள பரிசீலித்தது!

Thursday, December 01, 2011
மொரட்டுவை ராதாவத்தை பகுதி சிறுவர் இல்லமொன்று சுற்றுவளைக்கப்பட்ட சம்பவம் குறித்து முறைப்பாட்டினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மீள பரிசீலித்தது.

மேலதிக நீதவான் வை.பெர்னாண்டோ முன்னிலையில் இது தொடர்பான முறைப்பாடு பரிசீலிக்கப்பட்டது.

அரசாங்க அனுமதியுடன் இயங்கி வருகின்ற இந்த சிறுவர் இல்லத்திற்கு நீதிமன்றம் ஊடாகவும் சிறுவர்களையும் நிர்க்கதியற்ற பெண்களையும் சேர்ப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொண்டர் நிறுவனம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் சிறுவர்களை விற்கும் இடமாக சிறுவர் இல்லம் பிரபலமடைந்துள்ளதால் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பதை வைத்தியர்கள் நிராகரிப்பதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக மேலும் சில தினங்கள் தேவைப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சார்பாக பிரசன்னமாகியிருந்த உத்தியோகத்தர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினார்.

இதன் பிரகாரம் இது தொடர்பான முறைப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதி மீள பரிசீலிக்கப்படுமென நீதவான் அறிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்திகளை பிரசுரிக்கையில் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீதவான் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment