Thursday, December 01, 2011
சென்னை: இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.
நடிகர் கமல் ஹாஸன் தலைமையில் 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகை திரிஷா குத்து விளக்கேற்றினார். பிக்கி அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ்குமார் வரவேற்று பேசினார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்திய திரையுலகில் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச சினிமாவுக்கு நிகராக இந்திய திரையுலகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் மக்களுக்கு கருத்துக்கள் சொல்லும் படங்களையும் தயாரிக்க வேண்டும்," என்றார்.
தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் நடிகர் கமலஹாசன் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில், "டிஜிட்டல் சினிமா வளர்ந்தால் அரசுக்கு வருமானம் பெருகும். திரையுலகம் டிஜிட்டல் சினிமா மாற்றத்துக்குள் வந்தே தீரும்," என்றார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், டைரக்டர் பாலச்சந்தர், யு.டி.வி. சேர்மன் ரோனிஸ் க்ரூவாலா, சேம்பர் தலைவர் கல்யாண், பிக்கி அமைப்பின் தமிழக தலைவர் ரபீக் அகமது ஆகியோர் பேசினர்.

No comments:
Post a Comment