Thursday, December 1, 2011

இன பாகுபாடு ஒழிப்புக்கு ஐ.நா. கமிட்டி உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு!

Thursday, December 01, 2011
ஐக்கிய நாடுகள் : ஐ.நா.வின் பல்வேறு கமிட்டிகளுக்கு உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நிர்வாகம் மற்றும் பட்ஜெட் ஆலோசனை கமிட்டி, மனித உரிமைகள் கவுன்சில், சர்வதேச சட்ட கமிஷன் போன்றவற்றுக்கு நட்பு நாடுகளின் ஆதரவுடன் இந்திய பிரதிநிதிகள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த வாரம் ஐ.நா.வின் சர்வதேச கண்காணிப்பு கமிட்டிக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் இன பாகுபாடு ஒழிப்புக்கான கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடந்தது. இந்த கமிட்டி உறுப்பினராக கடந்த 2008ம் ஆண்டு இந்தியா சார்பில் தூதர் திலீப் லகிரி பதவியேற்றார். இவரை இந்தியா மீண்டும் பரிந்துரை செய்தது. இனபாகுபாடு ஒழிப்பு கமிட்டி உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 167 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 147 வாக்குகளை பெற்று திலீப் வெற்றி பெற்றார். இவர் வரும் ஜனவரி 20ம் தேதி கமிட்டி உறுப்பினராக பொறுப்பேற்பார். 3 ஆண்டு பதவி வகிப்பார். இவை எல்லாவற்றையும் விட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பிடிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சர்வதேச நாடுகளின் ஆதரவை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment