Thursday, December 1, 2011

கண்டி - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியர்கள் மூவர் காயம்!

Thursday, December 01, 2011
கண்டி - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

வரகாபொல பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது பெண்கள் மூவரே காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment