Thursday, December 1, 2011

சீஸ் பேர்க்கரும், சிக்கன் பேர்க்கரும் சாப்பிட்டீர்களா? புலி TNA பன்றிகளிடம் ஆசையோடு கேட்ட- டக்ளஸ் தேவானந்தா!


Thursday, December 01, 2011
பன்றிக்கு முன்பாக முத்தை போட்டாலும். பன்றிக்கு முத்தின் அருமை தெரியாது என்பார்கள். பன்றி முத்தை ஒரு போதும் நாடாது. அது சேற்றையே நாடிச்செல்லும்.

அது போலவே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்பாக பொருளாதார அபிருத்தி என்ற முத்தை போட்டாலும் சரி, அரசியல் தீர்வு என்ற முத்தை போட்டாலும் சரி, அவர்கள் சுயலாப அரசியல் என்ற சேற்றையே நாடிச்செல்வார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இதுவரை கால மனித குல வரலாறுகள் யாவும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் மாற்றங்களையே கண்டு வந்திருக்கிறது. வியக்கத்தக்க முன்னேற்றங்களையே அடைந்து வந்திருக்கிறது. இதற்கு, அழகிய எங்கள் இலங்கைத்தீவும் விதி விலக்கானது அல்ல. இன்று நாம் மாற்றங்களை கண்டிருக்கின்றோம்..

இந்த மாற்றங்கள் கடந்த காலங்களை விடவும் பல முன்னேற்றங்களை அடைந்து வருகின்றது. மாற்றத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களும் தமது உயரிய வாழ்வின் இலட்சியங்களை நோக்கி, அதற்கான பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
யுத்தமும், இரத்தமுமாக அமைதியற்று, அவலப்பட்டு, இருட்டில் கிடந்த எமது தேசம் இன்று நிம்மதிப் பொருமூச்சு விட்டு நிமிர்ந்து நிற்கிறது.

இப்போது இங்கு பிணங்கள் இல்லை. ரணங்கள் இல்லை. எல்லாமே இங்கு ஒழிந்து முடிந்து விட்டன. ஆனாலும், எமது தமிழ் பேசும் மக்களை தவறான வழிமுறையில் இதுவரை வழிநடத்தி வந்த சுயலாப தமிழ் தலைமைகளின் வெறும் கற்பனாவாத சிந்தனைகளை உணர்ந்து, சுயலாப தமிழ் தலைமைகளால் எதையுமே பெற்றுத்தராத, பேரிழப்புகளை மட்டுமே எமது மக்களுக்கு இது வரை பெற்றுத்தந்த துயரங்களையும், அவலங்களையும் கருத்தில் கொண்டு. தமிழ் பேசும் மக்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை வழங்க விரும்பி, இந்த சபையில் நான் தமிழ் பேசும் மக்களின் சில பிரச்சினைகள் குறித்தே பிரதானமாக உரையாற்ற விரும்புகின்றேன்.

தமது தேர்தல் வெற்றிக்காக, வாக்குகளை அபகரிப்பதற்காக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தமிழ் இனவாத வெறியை அடிக்கடி ஊட்டி, எமது மக்களை உசுப்பேற்றி விடுவதும், தமிழ் மக்கள் வீதிக்கு வரும் போது, மக்களை நடுத்தெருவில் கைவிட்டு, தமது
குடும்பங்களோடு நாட்டை விட்டு ஓடியும் விடுகின்றார்கள். அப்பாவி மக்களை பலிக்களத்திற்கு கொல்லக்கொடுத்து விட்டு தாம் மட்டும் உலக நாடுகளெங்கும் உல்லாச பயணம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் மழைபெய்கிறது…. நீங்கள் அமரிக்காவில் சென்று குடை பிடிக்கின்றீர்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும் இருந்து எமது மக்களுக்காக என்ன வாங்கி வந்தீர்கள்?... அங்கிருந்து எமது மக்களுக்காக என்னதொரு நல்ல செய்தியை கொண்டு வந்தீர்கள்?....

சீஸ் பேர்கரும், சிக்கன் பேக்கரும், பிச்சாவும், நீ ங்கள் விரும்பும் உற்சாக பானமும் உல்லாச விடுதியும் நன்றாக இருந்தது என்று உங்கள் குடும்பங்களோடு கூடிச்சிரித்து மகிழ்ந்து சொன்ன செய்திகளை தவிர தமிழ் மக்களுக்காக எதை சுமந்து வந்தீர்கள்?...

இவர்களால் தூண்டி விடப்பட்ட அப்பாவி மக்கள் அவலங்களை சுமந்து நின்றார்கள். ஆனால் இவர்களது குடும்பங்களோ வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்வு நடத்துகின்றார்கள்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், தமிழ் மக்களின் உரிமைக்காக இளைஞர் யுவதிகள் தங்களது உயிர்களை அர்பணம் செய்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழ் மக்கள் மீது பரிதாபப்படுவதுபோல் பாசாங்கு செய்து
முதலைக்கண்ணீர் வடித்து இந்த சபையில் உரையாற்றியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணமே தெரியாமல் கொழும்பில் வளரும் உங்களது பிள்ளைகளுக்கு அல்லது வெளிநாடுகளில் வாழுகின்ற உங்கள் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று அங்குள்ள நிலவரங்களை உங்கள் பிள்ளைகளுக்கு காட்டுங்கள் என்று ஐனாதிபதி அவர்களே உங்களுக்கு அன்பாக சொன்ன அவரது நற்பண்புகளை நான் மதிக்கின்றேன்.

பன்றிக்கு முன்பாக முத்தை போட்டாலும். பன்றிக்கு முத்தின் அருமை தெரியாது என்பார்கள். பன்றி முத்தை ஒரு போதும் நாடாது. அது சேற்றையே நாடிச்செல்லும். அது போலவே,… தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்பாக பொருளாதார அபிருத்தி என்ற முத்தை போட்டாலும் சரி, அரசியல் தீர்வு என்ற முத்தை போட்டாலும் சரி, அவர்கள் சுயலாப அரசியல் என்ற சேற்றையே நாடிச்செல்வார்கள்.

தமிழ் மக்களின் மன விருப்பங்களை ஏற்காமல், அவர்களது கனவுகளை மதிக்கமால் கற்பனைத்தேரில் ஏறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடி ஓடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒருநாள் ஒதுக்கி வைக்கும் என்றார்.

No comments:

Post a Comment