Thursday, December 1, 2011

இலங்கை நிரந்தர அரசியல் தீர்வு : ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி உறுதி!.

Thursday, December 01, 2011
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறை உள்நாட்டு ரீதியாக அமைய வேண்டுமென இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியான விசாரணைகளை விடவும் வினைத் திறனான உள்நாட்டு விசாரணை முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு ரீதியான நடவடிக்கை மிகவும் அவசியமானது எனவும், அது சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை விடவும் உள்நாட்டு ரீதியான நடவடிக்கை பொருத்தமானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யதார்த்தமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற முதன்மை நோக்கத்தை அடைப்படையாகக் கொண்டு உள்நாட்டு ரீதியான விசாரணைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கை அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளின் போது சர்வதேச அனுபவங்களை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை சிறந்த முன்னுதாரணமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை விரைவில் எட்டவேண்டும் என்று, அந்நாட்டை வலியுறுத்த உள்ளதாக ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம், இடம்பெயர்ந்த மக்களின் மறுகுடியேற்ற விவகாரம், இராணுவக் கட்டுப்பாட்டு பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை தமிழ்க்கூட்டமைப்பினர் அகாஸியிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. இலங்கையில் போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசியல் தீர்வை முன் வைப்பதற்கு இதுவே உகந்த காலம் எனவும் ஜப்பான் தூதர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment