Thursday, December 01, 2011
மனித உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் மனித உரிமை விடயங்களுக்கு அச்சம் காட்டி வருவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சரத் பொன்சேகாவிற்கு அஞ்சுவதாகவும் தனது பாராளுமன்ற உரைக்கும் அரசு பயப்படுவதாகவும் பொதுநலவாய நாடுகள் உச்சிமாநாட்டில் மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிப்பதுவரைக்கும் அரசு அச்சப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு எதிராக சபாநாயகரின் அனுமதியுடன் மாத்திரமே வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதனை மீறி அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் அதனை ஏற்காது தான் வழக்கு விசாரணைகளுக்குச் செல்லவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பொன்சேகாவிற்கு எதிரான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் எனவும் சபாநாயகரின் தீர்மானங்கள் அவராலேயே வெளியிடப்பட்டால் அது மிகவும் சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment