Thursday, December 01, 2011
மட்டக்களப்பில் இன்று (1.12.2011) இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மட்டக்களப்பு பார் வீதியில் வைத்து இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்களப்பைச்சேர்ந்த மாரிமுத்து ரகுநாதன்(67) என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் விபத்து!
காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் இன்று மதியம் 12 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தானது துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மீது ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் வேன் ஒன்று மோதியதாலேயே இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த துவிச்சக்கரவண்டியில் வந்த காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:
Post a Comment