Thursday, December 1, 2011

அமெரிக்க மாணவர்கள் ஆய்வறிக்கை சீனாவிடம் 3000 அணுகுண்டு?

Thursday, December 01, 2011
வாஷிங்டன் : சீனாவிடம் 3,000 அணுகுண்டுகள் இருக்கலாம் என்று அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழக மாணவர்கள், Ôஅண்டர்கிரவுண்ட் கிரேட் வால் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். கூகுள் எர்த், பிளாக், ராணுவ இதழ்கள் உள்பட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் 363 பக்க ஆய்வறிக்கையை பேராசியர் பிலிப் கார்பரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த பேராசிரியர் பென்டகனில் அதிகாரியாக பணியாற்றியவர். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மாணவர்களின் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முக்கிய அதிகாரிகளுக்கு ஆய்வறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிடம் 80 முதல் 400 அணுகுண்டுகள் வரை இருக்கும் என்று அமெரிக்கா நினைத்து கொண்டிருக்கிறது. ஆனால், 3,000க்கும் அதிகமான அணுகுண்டுகளை சீனா வைத்திருக்கும் என்று தெரிகிறது. அவை மிகப்பெரிய அளவில் இருக்கும்.
அணுகுண்டுகளை மறைத்து வைக்க, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு மிகப்பெரிய சுரங்கப் பாதைகளையும் சீனா உருவாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment