Thursday, December 1, 2011

இலங்கையிலிருந்து பிரித்தானியா சென்று மூன்று பெண்களை முத்தமிட முயற்சித்த இளைஞன்!

Thursday, December 01, 2011
பிரித்தானியப் பேருந்தில் வைத்து இளம் பெண்கள் மீது பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாக இலங்கை இளைஞன் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பேருந்தில் மூன்று பெண்கள் மீது இவ்வாறு பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட 24 வயதுடைய இலங்கை இளைஞர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி இன்று Teesside நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் சென்ற இளம் பெண்ணின் அருகில் சென்று அவரை உரசுதல், அவர் மீது சாய்தல் மற்றும் முத்தமிட முயற்சித்தல் போன்ற செயல்களில் குறித்த இளைஞன் ஈடுபட்டதாக துப்பறிவாளர்கள் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு பஸ்ஸில் ( Hartlepool bus) பெண்ணொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது சம்பவம் Middlesbrough பகுதியில் பஸ் ஒன்றில் நடந்துள்ளது. நவம்பர் 7ம் திகதி முதல் நவம்பர் 21ம் திகதிவரையான காலப்பகுதியில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment