Thursday, December 1, 2011

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது!

Thursday, December 01, 2011
மூன்று வயதுடைய குழந்தையொன்றின் கையை முறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டுரிமையாளரான பெண் கடைத்தொகுதியில் வைத்து குறித்த குழந்தையை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு பொருட் கொள்வனவுக்காக சென்ற சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தை அழுதுகொண்டிருக்கும் போது அந்தப் பணிப்பெண் குழந்தையின் கையை முறித்ததாக குவைத் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இலங்கை பணிப்பெண் 30 வயதுடையவராவார்.

சம்பவத்தை நேரில்கண்ட வர்த்தக உதவியாளர் சம்பந்தப்பட்ட வீட்டுரிமையாளரான பெண்ணிடம் அதனை தெரிவித்துள்ளார்.

சம்பவத்துக்கு இலக்கான குழந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment