Thursday, December 1, 2011

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்ய பிடியாணை!

Thursday, December 01, 2011
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்கொன்றுடன் தொடர்புடைய அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க தவறியமை காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூகொட நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment