Thursday, December 1, 2011

வவுனியா சிறைச்சாலை கைதிகளும் உணவு பகிஷ்கரிப்பு!

Thursday, December 01, 2011
அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவு பகிஷ்கரிப்பில் வவுனியா சிறைச்சாலை கைதிகளும் இணைந்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ சந்தேகநபர்கள் கடந்த 27 ஆம் திகதி முதல் உணவு உட்கொள்ளாதிருப்பதாக அனுராதபுரம் சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலை கைதிகளும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நேற்றிரவு இணைந்து கொண்டதாக அந்த சிறைச்சாலையின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலை கைதிகளின் கைத்தொலைபேசிகள் சிலவற்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியதன் காரணமாக அவர்கள் உணவு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment