Thursday, December 1, 2011

போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம், பல லட்சம் ரூபாய் "சுருட்டிய' வழக்கில், புலிகள் குறித்து, "கியூ' பிரிவு போலீசார் விசாரணை!

Thursday, December 01, 2011
மதுரை:மதுரையில், போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம், பல லட்சம் ரூபாய் சுருட்டிய' வழக்கில், புலிகள் குறித்து, "கியூ' பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை தல்லாகுளத்தில், நவ.,28 அதிகாலை ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கணேசன், 33, என்பவர், 15 ஏ.டி.எம்., கார்டுகளை வைத்து, பணம் எடுத்தபோது போலீசில் பிடிபட்டார்.

இவர் கொடுத்த தகவலின்படி, நண்பர்கள் நாமக்கல் பரமத்திவேலூர் பிரதாப், 40, இலங்கை மன்னார் மாவட்டம் ஆனந்த் என்ற ரூபன், 42, உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 8 லட்சம் ரூபாய், 48 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள், போலி கார்டு மூலம், ஏ.டி.எம்.,மில், 10 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்து, 500 ரூபாய் கமிஷன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு கமிஷன் தந்தது யார் என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. கைதானவர்கள் போல், வேறு கும்பல் ஏதும், ஏ.டி.எம்., மையங்களில் கைவரிசை காட்டுகிறதா என கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி பின்னணியில், புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதை, போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து, தமிழகம் முழுவதுமுள்ள அகதிகள் முகாம்களில், "கியூ' பிரிவு போலீசாரும், மதுரை போலீசாரும் விசாரிக்கின்றனர். தவிர, "வங்கி கணக்கில், பணம் குறைகிறது என்று யாராவது புகார் செய்துள்ளார்களா' என, வங்கிகளிடம் போலீசார் விவரம் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment