Thursday, December 1, 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற "ஸ்டிரைக்'!

Thursday, December 01, 2011
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக்கோரி, காலவரையற்ற ஸ்டிரைக்கில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் கிளாடுவின் படகிலிருந்த எமர்சன், பிரசாத், வில்சன் உள்ளிட்ட ஐந்து மீனவர்களை, இலங்கை கடற்படையினர், படகுடன் சிறைபிடித்து சென்றனர். இலங்கை கடற்படை வசம் உள்ள, ஐந்து மீனவர்களின் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கவில்லை. பிடிபட்ட மீனவர்களையும், படகையும் மீட்கக்கோரியும், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மீனவர் நலனுக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறக்கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment