Thursday, December 01, 2011
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைப்பதற்காக, தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று சந்திக்கிறார். 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணை தற்போது வலுவிழந்து வருவதாக கேரள அரசு கூறி வருகிறது. அணை உடையும் அபாயம் இருப்பதால், இடுக்கி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகக் கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது கேரள அரசு.
இதனையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. அந்த கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை கேரள முதல்வரிடமிருந்து எந்த ஒரு கடிதமும் தமிழக முதல்வருக்கு வரவில்லை என்று முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கடிதம் கிடைத்த பின்னரே முழுவிவரம் தெரியவரும் என தமிழக முதல்வர் அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment