Thursday, December 01, 2011
சென்னை: நாடு முழுவதும் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய முகம்மது ஆதில், முகம்மது காதில் சித்திக், இர்ஷத்கான், கவுகர் அஜீஸ் கோமானி, அகமது ஜமால், அப்துல் ரகுமான் ஆகிய 6 பேர் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் "இந்தியன் முஜாகிதீன்" என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் டெல்லி அதிரடிப்படை போலீசார், உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.பிடிபட்ட 6 தீவிரவாதிகளில் அப்துல் ரஹ்மான், முகம்மது இர்ஷத்கான் (52) இருவரும் சென்னையில் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
அப்துல் ரஹ்மான் சேலையூர் சந்தோஷபுரத்தில் தங்கி இருந்து என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தான். அவனுடன் இர்ஷத்கான் வந்து தங்கி இருந்தான். அவர்கள் இருந்த வீட்டுக்கு அடிக்கடி தீவிரவாதிகள் வந்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இம்ரான் என்ற ஆசிப் என்பவன் சென்னை வந்து அப்துல்ரஹ்மானை சந்தித்து பேசி விட்டுச் சென்றுள்ளான்.அப்போது அவன் அப்துல் ரஹ்மானுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிகப் பெரிய தொடர் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன்கள் சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டுகளை வைக்க வேண்டுமானால் பெரிய நெட்வொர்க் வேண்டும். இந்த நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சிகளில்தான் முஜாகிதீன் ஒருங்கிணைப்பாளரான இம்ரான் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அவனுடன் தொடர்புடைய சுமார் 25 பேர் சென்னையில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்துல்ரஹ்மான், இர்ஷாத்கான் இருவரும் பிடிபட்டதன் மூலம் சென்னையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் ரகசிய தளம் அமைவது தகர்க்கப்பட்டுள்ளது.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பெரும்பாலும் இரண்டு, இரண்டு பேராகத்தான் இயங்குவார்கள். அப்துல்ரஹ்மான், இர்ஷாத் கான் போல மேலும் பல தீவிரவாத ஜோடிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான போலீஸ் உளவுப் பிரிவு உள்ளதால் தீவிரவாதிகள் இது வரை சென்னை பக்கம் வந்ததில்லை.
தற்போது தான் அவர்கள் ரகசிய தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக அது தொடக்கத்திலேயே தெரிந்து விட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.சென்னையில் வேறு எங்கெங்கு ரகசிய தளங்கள் உள்ளது என்ற அதிரடி வேட்டையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சென்னையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்த மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று கடந்த வாரம் நோட்டமிட்டது தெரிய வந்துள்ளது. முஜாகிதீன்களுக்கு பண உதவி செய்து ஒருங்கிணைக்கும் இம்ரான் என்பவன் கடந்த வாரம் சென்னை வந்த போது இந்த சதி நோட்டம் நடந்துள்ளது. அவனுடன் இர்ஷாத் கான், மாணவர் அப்துல்ரஹ்மான் ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் ரிச்சி தெரு, தி.நகர் ரங்கநாதன் தெரு, பாரி முனை, பர்மா பஜார் சென்று நாசவேலை செய்ய ஏற்ற பகுதி எது என்று ஆய்வு செய்துள்ளனர்.
எந்தெந்த நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது? அதிக உயிரிழப்பை உண்டாக்க தெருவில் எங்கெங்கு குண்டுகள் வைப்பது என்பனவற்றை கூட அவர்கள் ஆய்வு செய்தது தெரிய வந்துள்ளது.
ரிச்சி தெருவுக்கு அவர்கள் சென்றிருந்தபோது இம்ரான் ஒரு லேப்-டாப் வாங்கி அப்துல் ரஹ்மானுக்கு பரிசாக கொடுத்துள்ளான். குண்டு வெடிப்பு சதி திட்டம் தொடர்பான தகவல்களை பரிமாறி கொள்ளும் எண்ணத்தில் இந்த லேப்-டாப் வாங்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சனிக்கிழமை இம்ரான் ரிச்சி தெருவில் லேப்-டாப் வாங்கியுள்ளான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அப்துல் ரஹ்மானை போலீசார் சேலையூர் வீட்டில் வைத்து கைது செய்தனர். அவனுடன் தங்கியிருந்த இம்ரான் நூலிழையில் தப்பி விட்டான். அவன் சென்னையில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்று மத்திய-மாநில உளவுப் பிரிவினர் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் இம்ரானை பிடிக்க தமிழக போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இமரான், அப்துல்ரஹ்மான், இர்ஷாத்கான் மூவரும் சென்னையில் வேறு எங்கெங்கு சென்றனர், என்னென்ன வாங்கினார்கள் என்று தமிழக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ரிச்சி தெரு உள்பட பல முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் கடந்த வாரம் பதிவான காட்சிகளை தமிழக போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் மிக முக்கிய தீவிரவாதி சென்னையில் பதுங்கி இருந்ததால் தமிழக போலீசார் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக டி.ஜி.பி. கே.ராமானுஜம் கூறினார்.
தீவிரவாதிகள் நாச வேலை செய்து விடக் கூடாது என்பதற்காக சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் கைவரிசை காட்ட கூடும் என்று கருதப்படும் சுமார் 100 இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த 100 இடங்களிலும் சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வருகிற 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று சென்னையில் நாசவேலை செய்ய இந்தியன் முஜாகிதீன்கள் வியூகம் வகுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எனவே சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், கோவில்கள், பெரிய ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர சென்னையில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment