Thursday, December 1, 2011

கோப் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Thursday, December 01, 2011
2012 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான குழு நிலை விவாதம் இன்று ஆரம்பமானது.

இதன்போது கோப் சபையின் தலைவர் அமைச்சர் டியூ குணசேகவினால், கோப் என்ற அரச நிறுவனங்கள் தொடர்பான ஆய்வறிக்கை, இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகர இந்த ஆய்வறிக்கையானது ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பிக்காது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்ற யோசனை ஒன்றையும் முன்வைத்தார்.

அத்துடன் தம்மால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கையில் சுமார் 229அரச நிறுவனங்களை ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்தி;ட்டம் மீதான குழுநிலை விவாதம் தொடர்ந்தும் நாடாளுமன்றல் இடம்பெற்று வருகிறது.

No comments:

Post a Comment