Friday, December 2, 2011

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திவந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Friday, December 02, 2011
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திவந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் சோதனை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிந்து இன்று அதிகாலை 04 மணியளவில் இலங்கை நோக்கி வந்த விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் நபராவார்.

இவரிடமிருந்து 51 கிலோ என்சால், புகையிலை தூள் தலா 10 கிரேம் அடங்கிய 1000 குப்பிகள், 150 ஹான்ஸ் பைக்கட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment