ராமநாதபுரத்தில் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தை சமரச கூட்டம் தோல்வியில் முடிந்தது 3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்:இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்கள் வராமல் நாங்கள் கடலுக்கு செல்ல மாட்டோம் மீனவர் சங்க பிரதிநிதிகள் திட்டவட்டம்!
Friday, December 02, 2011
மண்டபம் : இலங்கை கடற்படை பிடித்து சென்ற 5 மீனவர்களை மீட்கும் வரை கடலுக்கு செல்ல மாட்டோம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டதால், நேற்றிரவு ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் நடந்த சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது. கச்சதீவு அருகே கடந்த 28ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகிய 5 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். நெடுந்தீவு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் மீது, போதை பொருள் கடத்தியதாக இலங்கை ஊர்காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாழ்ப்பாணத்தில் உள்ள மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 5 மீனவர்களையும் காங்கேசன்துறை போலீசார் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை பிடித்து சென்ற மீனவர்களையும் உடனடியாக மீட்க வலியுறுத்தியும், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 3வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று இரவு ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் தலைமையில், மீனவர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மீனவர்கள் 5 பேரும் 7ம் தேதிக்குள் மீட்கப்படுவர். போராட்டத்தை கைவிட்டு கடலுக்குச் செல்லுங்கள் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். ஆனால், இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்கள் வராமல் நாங்கள் கடலுக்கு செல்ல மாட்டோம் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் கலெக்டர் நடத்திய சமரச கூட்டம் தோல்வியில் முடிந்தது.

No comments:
Post a Comment