Friday, December 2, 2011

பொல்கஹவெல-கஹவத்தை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இந்திய பிரஜை உட்பட நால்வர் படுகாயம்!

Friday, December 02, 2011
பொல்கஹவெல - கஹவத்தை பிரதேசத்தில் இன்று காலை 06.15 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இந்திய பிரஜை உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பஸ், எதிர் திசையில் வந்த வான் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு மருதானை ஜயா மாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய ஜோர்ஜ் அல்பொன்சு சசிகரன் என்பவராவார்.

விபத்தில் காயமடைந்த வானில் பயணம் செய்த இந்திய பிரஜை உள்ளிட்ட ஏனைய நால்வரும் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ள பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment