Thursday, December 01, 2011
ஒரே நாடு என ஏற்றுக் கொண்டால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அதனை தவிர்க்கமுடியாது என்றும் நாட்டில் மக்களுடன் நட்புறவாக செயற்படக் கூடிய படையினரே தற்போது சேவையாற்றுவதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது நேற்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்போரே பாதுகாப்புச் செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென்று கோரி வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செலவுகளை ஒரு முதலீடாகவே தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையினால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை புலிகள் வடக்கைக் கைப்பற்றியிருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்பது அவர்களது மனச்சாட்சிகளுக்குத் தெரியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment