Thursday, December 1, 2011

ஆணைக்குழுவின் அறிக்கையில் யாராவது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்-கெஹெலிய ரம்புக்வெல!

Thursday, December 01, 2011
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் யாராவது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் வெளிநாடுகளின் தலையீட்டுடன் கூடிய தண்டனைகளை நாங்கள் ஏற்கமாட்டோம். இலங்கை இறைமையுள்ள சுயாதீனமான நாடு என்ற வகையில் எமது உள்நாட்டு செயற்பாடுகளின் அடிப்படையில் இந்த விடயங்களை கையாள்வோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யுத்தம் முடியும் முன்னரே இவ்வாறானதொரு ஆணைக்குழுவை நியமித்து விடயங்களை ஆராயவேண்டும் என்று ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். அதனடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் யாருக்கு எதிராகவாவது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நாங்கள் உள்நாட்டு செயற்பாட்டின் ஊடாக முன்னெடுக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment