Friday, December 02, 2011
சென்னை : பாபர் மசூதி இடிப்பு தினமான வரும் 6ம் தேதி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், பஸ், ரயில், விமான நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 92ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தாக்குதல் நடத்த தீவிரவாத இயக்கங்கள் சதி செய்வதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் டிசம்பர் 6ல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இயக்கத்தால் வெடிகுண்டு பயிற்சி அளிக்கப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த தவுபிக், டெல்லி அருகே சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் டெல்லியை சேர்ந்த தீவிரவாதி இர்சாத் (50), இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய தீவிரவாதியான ஆசிப், போலீஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர் இன்னும் தமிழகத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சேலையூரில் தங்கியிருந்த தீவிரவாதிகள், சென்னையில் பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும், அந்த பகுதிகளில் அடிக்கடி நோட்டமிட்டதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு குறித்து டிஜிபி ராமானுஜம், போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோருடன் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
தலைமறைவாகிவிட்ட தீவிரவாதிகளை பிடிக்கவும், டிசம்பர் 6ல் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 24 மணி நேர வாகன சோதனை, ஓட்டல்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொடுங்கையூர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, தாம்பரம், சேலையூர், பள்ளிக்கரணை, மதுரவாயல் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
நகரின் நுழைவு வாயில்களில் 17 இடங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. உளவுப் பிரிவு போலீசாரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். நகரில் வழிபாட்டு தலங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பஸ், ரயில், விமான நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள், வர்த்தக மையங்கள், தியேட்டர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ரயில்களில் நாளை முதல் 7ம் தேதி வரை பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும், மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஷாப்பிங் மால்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நகரில் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களும் செய்து கொள்ள அறிவுறுத்தவும் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா மெட்ரிக் பள்ளியில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பவானீஸ்வரி, உதவி கமிஷனர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சூட்கேஸ், பேக் போன்ற பொருட்கள் கீழே கிடந்தால் அதை தொடாமல் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. சென்னை மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், பழநி முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில் மற்றும் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment