Tuesday, November 29, 2011

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, சசிகலாவிடம் இன்று விசாரணை!

Tuesday, November 29, 2011
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடக்கும் இந்த விசாரணையில் சசிகலா நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு 4 நாட்கள் பதில் அளித்தார். சுமார் 1,339 கேள்விகளுக்கு பதில் தந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று நடக்கும் விசாரணையில் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்படவுள்ளன. பெங்களூர் மாநகராட்சி அருகே உள்ள சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள தனி நீதிமன்றத்தில் சசிகலாவிடம் விசாரணை நடக்கவுள்ளது.

ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரிடம் விசாரணை முடிந்துவிட்டதால், சிட்டி சிவில் கோர்ட் வளாகத்திலேயே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் விசாரணைகள் நடக்கவுள்ளன.

No comments:

Post a Comment