
கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் (வயது 27) நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார் .யாழ்.பல்கலைக்கழகத்தையண்டிய சிவன்-அம்மன் கோவிலடியினிலேயே வெள்ளை வான் கும்பலால் இவர் கடத்தப்பட்டதாக தெரியவருகின்றது. பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியிலிருந்து மோட்டார் சைக்கிளினில் பயணித்துக்கொண்டிருந்த இவனை குறித்த வெள்ளை வான் கும்பல் வழிமறித்து கடத்தியுள்ளது. கொழும்பு செல்வதாக கூறி அருகாக உள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்ட இக்கும்பல் பின்னர் கண்களை கட்டி கடத்தி சென்றுள்ளது.எனினும் தன்னை தடுத்து வைத்த இடம் பற்றி எதனையும் கூற முடியாதவராகவே வேதாரணியம் லத்தீஸ் உள்ளார்.
இவர் மோசமாக அச்சுறுத்தப்பட்டுள்ளதால் பயந்த நிலையில் காணப்படுவதாக குடும்பத்தவர்கள் கூறுகின்றனர்;.குடும்பத்தவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி; பொலிஸார் அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment