Tuesday, November 29, 2011
மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆலோசனைகளுக்கு அமையவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப் பினர்கள் என்ற சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு பகுதி பகுதியாக விடுவிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆலோசனைக்கு அமைவாக அடையாளம் காணப்பட்டு, பகுதி பகுதியாக விடுவிக்கப்படுகின்றனர்.
அதேபோன்று, புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் புலிகளின் ஊடகத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தயாமாஸ்டர், புலிகளின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
எனினும், நாட்டைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப் போராடிய முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்குச் செல்லவும் சிறை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
கே.பிக்கு ஒரு சட்டம், சரத் பொன்சேகாவுக்கு இன்னொரு சட்டமா? எது எப்படியிருப்பினும், அனைவருக்கும் பொதுவான சட்டம் பின்பற்றப்படவேண்டும். எனினும், சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்படடது அநீதி எனப் பெரும்பான்மையின மக்களும் அறிந்திருக்கிறார்கள் எனவும் அத்தநாயக்க கூறியுள்ளார்.

No comments:
Post a Comment